மத்திய வங்கியின் பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விவாதத்திற்கு நாளை (06) தவிர்த்து மேலும் இரு தினங்கள் பெற்றுக்கொள்ள சபாநாயகருடன் நடைபெற்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டடுள்ளது.
நாளைய தினம் குறித்த விடயம் தொடர்பில் முற்பகல் 10.30 மணி அளவில் விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், எதிர்வரும் 20 ஆம் திகதியிலிருந்து இரண்டு நாற்களுக்கு அடுத்த விவாதத்தை நடத்த கட்சி தலைசர்கள் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.
இதுவரையில் பாராளுமன்றத்திற்கு முன் சமர்ப்பிக்கப்படாத ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் இணைப்புகளை நாளை பாராளுமன்றத்திற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளருக்கு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment