மகளிருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க இலங்கை சாதனையைப் புதுப்பித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் அழைப்பு மெய்வல்லுநர் போட்டிகளிலேயே அவர் இந்த சாதனை இலக்கை அடைந்துள்ளார்.
நிலானி ரத்நாயக்க 9 நிமிடங்கள், 55.59 விநாடிகளில் 3000 மீட்டரைக் கடந்துள்ளார்.
இதன் மூலம் தனது பழைய சாதனையான 10 நிமிடங்கள், 3.94 விநாடிகள் எனும் காலப்பெறுதியை முறியடித்து, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதேவேளை, ஆடவருக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் R.M.S. புஷ்பகுமார தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
போட்டியைப் பூர்த்தி செய்ய அவருக்கு 8 நிமிடங்கள், 59.7 விநாடிகள் சென்றுள்ளன.
மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் நிமாலி லியனாரச்சி வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளதுடன், கயந்திகா அபேரத்ன வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆடவருக்கான 4X100 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இலங்கை குழாம் வெள்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டது.

Post a Comment
Post a Comment