உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி






உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய, ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களுக்குமான இடவசதிகளை ஏற்பாடு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி குறிப்பிட்டார்.

அதற்கான கொள்கை வகுப்புகள் வௌியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற சபைகள் கூடிய பின்னர் சபைகளுக்கான தலைவர் உள்ளிட்ட நிருவாகக் குழுவினரை நியமிப்பது தொடர்பிலும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தௌிவுப்படுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றது.

இதல் 239 மன்றங்களை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிக் கொண்டது.

ஐக்கிய தேசியக் கட்சி 41 சபைகளையும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 10 சபைகளையும் வெற்றிக் கொண்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சி 34 சபைகளை வெற்றிக் கொண்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது