அக்கரைப்பற்று நீதிமன்றினால்,அதாவுல்லாவுக்கு அழைப்பாணை




(இர்சாத்)
அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான  தேசிய கோங்கிரஸ், தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில், தேசிய கோங்கிரஸ் தலைவரும், முன்னாள் உள்ளாட்சி, மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.அதாவுல்லா, மாற்றுக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தாக்குமாறு கூறியதாக அக்கரைப்பற்றுப் பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அக்கரைப்பற்றுப் பொலிசார், அக்கரைப்பற்று நீதிமன்றில் முன்னாள் அமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இதன் அடிப்படையில், அக்கரைப்பற்று கௌரவ  மாவட்ட நீதிபதியும், நீதவானுமான பீற்றர் போல், ஏ.எல். அதாவுல்லாவை  எதிர்வரும் மார்ச் மாதம் நீதிமன்றில் ஆஜராகும் படி இன்றைய தினம் அழைப்பாணை விடுத்துள்ளார்.