(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் அமைந்துள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோனேஸ்வரர் ஆலயத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் எதிர்வரும் மஹா சிவராத்தி அனுஷ்டான நிகழ்வுகள் தொடர்பாகவும் திருக்கோனேஸ்வரர் ஆலயத்தின் நம்பிக்கையாளர் சபையினர் இன்று (07) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவுடன் கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலில் எதிர்வரும் மஹா சிவராத்திரி உற்சவ கால ஏற்பாடு தொடர்பாகவும் இவ்வாலயத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
யாத்திரிகர் தங்குமிடமொன்றை நிர்மாணித்தல். ஆலய உட்புறச்சூழலை சுத்தமாக பேனுதல் , தொல் பொருள் திணைக்களத்தின் அனுமதியினைப்பெற்று தானசாலை, மற்றும் உட்கட்டுமானங்களை நிர்மாணித்தல் தொடர்பாக பல திட்ட முன்மொழிவுகள் கிழக்கு மாகாண ஆளுனருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
திருக்கோனேஸ்வரர் ஆலயத்தை சர்வதேச தரத்திலான மத வழிபாட்டுத்தலமாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இவ்வாலயத்தின் யாத்திரிகள் தங்குமடமொன்றை நிர்மாணிப்பதற்கு திருகோணமலையின் புறநகர் பகுதியில் காணியொன்றினை ஒதுக்கி தருவதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம இதன் போது உறுதியளித்தார்.
Post a Comment
Post a Comment