யாழ். மாநகர மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் துணை மேயராக து. ஈசன் ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்த்தினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர், ஆட்சி அமைப்பதில் பல சிக்கல் நிலமைகள் காணப்படுகின்ற போதிலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர் மட்டத்தினர் இன்று (14) யாழ். மாட்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இந்த கலந்துரையாடலின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தினர் ஏக மனதாக தீர்மானித்துள்ளதுடன், உயர்மட்டத்தின் தீர்மானத்தை ஏனைய உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
எதிர்வரும் 2 வாரங்களில் இருவரும் தமது பதவிகளை சம்பிரதாயபூர்வமாக ஏற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பராராளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ. சுமந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட ரெலோவின் செயலாளர் நாயகம் என்.ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
(யாழ் நிருபர் தீபன்/சுமித்தி)

Post a Comment
Post a Comment