சிங்­கள மக்­கள் மகிந்தவை மீண்­டும் தெரிவு செய்­தி­ருக்­கின்­றார்­கள்




புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான முயற்சி கைவி­டப்­ப­டு­மாக இருந்­தால் தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை எப்­படி நிறை­வேற்­றப் போகின்­றோம் என்­பது தொடர்­பில், தலை­வர்­கள் சேர்ந்து ஆராய வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது.
இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­ மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.
யாழ்ப்­பா­ணத்­தில் அவர் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­தா­வது,

சிங்­கள மக்­கள் மகிந்த ராஜ­பக்­சவை மீண்­டும் தெரிவு செய்­தி­ருக்­கின்­றார்­கள். மகிந்த ராஜ­பக்ச இந்­தத் தேர்­த­லில், புதிய அர­ச­மைப்பு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டால் நாடு பிள­வ­டைந்து விடும் என்று திரும்­பத் திரும்­பக் கூறி வந்­தார். சிங்­கள மக்­க­ளின் மாற்­றத்­துக்கு அது பிர­தான கார­ண­மாக இருக்­க­லாம்.
புதிய அர­ச­மைப்பு முயற்சி பெரிய பின்­ன­டை­வைச் சந்­தித்­தி­ருக்­கின்­றது என்றே சிந்­திக்­கத் தோன்­று­கின்­றது. புதிய அர­ச­மைப்பு முயற்சி கைவி­டப்­ப­டு­மாக இருந்­தால், தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை நிறை­வேற்ற என்ன செய்­யப் போகின்­றோம்?. இது தொடர்­பில் ஆராய வேண்­டிய நிர்ப்­பந்­தம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது – என்­றார்.