இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கில் அவர் மீது குற்றஞ்சாட்டப்படும் என இஸ்ரேல் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தனித்தனி வழக்குகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கைக்கு விரோதமாக நடந்துக் கொண்டார் என்பதை நிரூபிக்க போதிய ஆதாரம் உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அடிப்படையற்றது என்றும், தான் பிரதமராக தொடர்ந்து பணியாற்ற போவதாகவும் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றம் ஏதுமில்லாமல் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?
இஸ்ரேல் பத்திரிக்கையான ’எடியாட் அக்கோரனாட்’ தனக்கு சாதகமாக செய்தி வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு பதிலாக அதன் போட்டி பத்திரிக்கையை கட்டுப்படுத்துவதாகவும் நேதன்யாஹு தெரிவித்தாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எடியாட் பத்திரிக்கையின் ஆசிரியரும் வழக்கை சந்திப்பார் என்று போலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹாலிவுட்டைச் சேர்ந்த மொகல் ஆனன் மில்ஷன் மற்றும் பிற ஆதரவாளர்களிடமிருந்து மில்லியன் மதிப்பிலான பரிசுப் பொருட்களை நேதன்யாஹு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்குகளின் இறுதி முடிவு அட்டானி ஜெனிரலின் அலுவலகத்தால் எடுக்கப்படும். முடிவு வருவதற்கு பல மாதங்கள் ஆகும்.
கடந்த வருடங்களில், குறைந்தது 15 விசாரணைகளை தான் சந்தித்திருப்பதாகவும், அனைத்தும் ஒன்றிமில்லாமல் முடிந்திருக்கிறது இதுவும் அதுபோன்றே முடியும் என்றும் நேதன்யாஹு தெரிவித்துள்ளார்.
68 வயதாகும் நேதன்யாஹு 12 வருடங்களாக பிரதமராக இருந்து வருகிறார்.
அவரது பதவி காலத்தில் இம்மாதிரியான பல விசாரணைகளை அவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment