சட்டத்தை மீறி கையேடுகளை விநியோகித்த வேட்பாளர் கைது




கையேடுகளை விநியோகித்துக் கொண்டிருந்த வேட்பாளர் ஒருவர் சிலாபம், புஞ்சுலத்தாவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று (09) பகல் சிலாபம் பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

சந்தேகநபரான வேட்பாளரிடம் இருந்து கட்சி சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்ட 22 கையேடுகள் மற்றும் 02 பதாகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட உள்ளார்.