சிவராத்திரி விஷேட பூஜையில் கிழக்கு ஆளுனர்




(அப்துல்சலாம் யாசீம் )

திருகோணமலையில் பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரா இந்து ஆலயத்தில் மஹா சிவராத்திரி விஷேட பூஜை நிகழ்வில் நேற்றிரவு (13) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவும் அவரது பாரியார் தீப்தி போகொல்லாகமயும் கலந்து கொண்டனர்.


உலகெங்கும் இந்து மக்களால்  கொண்டாடப்பட்டு வரும்  சிவராத்திரி விழாவில்  ஆசியாவின் பிரபலமிக்க இந்து ஆலயமாக மாற்றப்படவிருக்கின்ற  கோயிலின் பூஜையில் கலந்து கொள்வது தமக்கு கிடைத்த வரம் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.


இச்சிவராத்திரி விழாவில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்  பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் நகர சபையின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.