(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
#பேகம் காலிதாசியா 1945ம் ஆண்டு பிறந்தவர்.பங்களாதேஸின் 7 வது ஜனாதிபதி முஜிபுர் ரஹ்மானின் மனைவியாவார்.தமது கணவர். சதிப் புரட்சியினால், கொல்லப்பட்டதன் பிறகு,தனது கணவரால் 1970ல் ஸ்தாபிக்கப்பட்ட பங்களாதேஸின் தேசிய கட்சியின்(BNP) தலைவராகப் பணியேற்றார்.
பங்களாதேஸில்,1991 -1996 . 2001 - 2006 வரைப் பிரதமராகப் பணி புரிந்த முதல் பெண் பிரதமரும், தற்போதைய எதிர் கட்சித் தலைவருமான,பேகம் காலிதா சியா ஊழல் குற்றச் சாட்டுக்களுக்காக சிறைத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் வங்க தேச முன்னாள் பிரதமர் கலிதா சியாவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை கலிதா ஜியா பிரதமராக இருந்த போது அறக்கட்டளைக்கு நிதியாக வந்த இரண்டரை லட்சம் டாலரை கையாடல் செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட ஆறு பேருக்கும் இதில் தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த டாக்கா நீதிமன்றம், கலிதா ஜியா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக இன்று தீர்ப்பளித்தது. அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட ஐந்து பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது. இதனால், வரும் டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் அந்நாட்டு பொதுத்தேர்தலில் கலிதா ஜியா போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment