அரசாங்கத்தினுள் அதிரடி மாற்றம்




உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் காரணத்தால், எதிர்வரும் ஓரிரு தினங்களுக்குள் அரசாங்கத்தில் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கலந்துகொண்ட விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில், இதன்போது ஜனாதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டதாக அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.