ஆளுனரினால் அன்பளிப்பு




(அப்துல்சலாம் யாசீம் )

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட சேனையூர் புவனேஸ்வரி வித்தியாலத்தில்  கல்வி கற்கும்  மாணவர்கள் மூன்று பேருக்கு  ஜந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்  அதிகூடிய புள்ளிகளைப்பெற்றமைக்காக 
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம நன்கொடையாக  காசோலைகளை நேற்று (07) வழங்கி வைத்தார்.

சேனையூர் புவனேஸ்வரி வித்தியாலயத்தின் அதிபர் திருமதி உமாரதீஸ்தரன் அவர்கள் கிழக்கு  மாகாண ஆளுநரிடம் தங்களுடைய பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 21 வரடங்கங்களின் பின்னர் முதன் முறையாக மூன்று மாணவர்கள்  வெட்டுப்புள்ளிக்கு மேலாக புள்ளிகளை பெற்றமை தொடர்பாகும் பாடசாலையின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்துரையாடிய போதே இம்மாணவர்களுக்கு அன்பளிப்பாக காசோலை வழங்கப்பட்டது.




இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும்  மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.டி.எம்.நிஸாம் மற்றும் பாடசாலையின் ஆசிரியைகள்  கலந்து கொண்டனர்.