நாளை (10) நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் மற்றும் வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்பு நாளை காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இடம்பெறுகின்றது.
வாக்களிப்பு நிறைவடைந்ததும் தபால் வாக்குகள் மற்றும் வாக்களிப்பு முடிவுகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஒரு வாக்களிப்பு நிலையத்தைக் கொண்ட தேர்தல் பிரிவுகளின் தேர்தல் முடிவுகள் அந்த இடத்திலேயே எண்ணப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.
13374 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென தயார் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளோரின் எண்ணிக்கை 1கோடியே 57 இலட்சத்து 60ஆயிரத்து 50 பேர் ஆகும்.
இதேவேளை அனைத்து வாக்களிப்பு நிலையங்களையும் உள்ளடக்கிய வகையில் பொலிஸ் நடமாடும் சேவையை முன்னெடுப்பதற்கும் திட்டமிட்டு இருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் இணைத்து கொள்ளப்படவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment
Post a Comment