உற்பத்திகள் முடங்கின




இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் சந்தேகநபராகக் காணப்படும் அர்ஜுன் அலோசியஸினால் நடத்தப்பட்டு வந்த டபிள்யூ.எம்.மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள், கடந்த ஒரு வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
குறித்த நிறுவனத்துக்குச் சொந்தமாக, வெலிசர பிரதேசத்தில் காணப்படும் மதுபான உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளே, இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால், தற்காலிகமாகச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்திகளே, தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அலுவலக நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.