ரஷ்யாவில் உள்நாட்டு பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 71 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மாஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் சென்றுக்கொண்டிருந்தது.
விமானம் புறப்பட்ட சில நொடியிலேயே ரேடாரில் இருந்து காணாமல் போய் உள்ளது. பின் அந்த விமானம் அருகில் இருக்கும் 'ஆர்குனோவா' கிராமத்தில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 65 பயணிகள், 6 ஊழியர்கள் பயணித்தனர். இந்த விமானத்தில் பயணித்தவர்களின் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விமான பாகங்கள் விழுந்த இடம் குறித்தும், உயிருடன் யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றது.

Post a Comment
Post a Comment