பிரதமர் பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான டிபென்டர் வாகனம் ஒன்றுடன் வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (05) இரவு 10 மணியவில் சிலாபம் கொழும்பு வீதியின் கட்டுனேரிய பிரதேசத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
விபத்தில் பிரதமர் பாதுகாப்பு பிரிவு டிபென்டர் வாகன சாரதியாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அமில சம்பத் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த கண்டி வீதி, வெலிவேரிய பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான விஷ்மித மதுஷான், 21 வயதான எல்.ஆர் விஷ்வ, 17 வயதான எல்.ஆர் இஷான் மற்றும் 28 வயதான எல்.ஆர் சமீர ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தளத்தில் இடம்பெற்ற பிரதமரின் மக்கள் சந்திப்பிற்கு சென்று திரும்பி வந்த விசேட அதிரடி படையினர் குறித்த டிபெனடர் வாகனத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment
Post a Comment