நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமான 2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் இன்று மாலை 04.00 மணியாகும் போது பதிவாகியுள்ள வாக்கு நிலவரங்களின் படி,
கம்பஹா மாவட்டத்தில் 75%, மாத்தளை மாவட்டத்தில் 80%, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 80%, நுவரெலியா மாவட்டத்தில் 60%, பொலன்னறுவை மாவட்டத்தில் 75%, அநுராதபுரம் மாவட்டத்தில் 85%, கிளிநொச்சி மாவட்டத்தில் 60%, வாக்குப்பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் 80%, காலி மாவட்டத்தில் 75%, குருநாகல் மாவட்டத்தில் 78%, இரத்தினபுரி மாவட்டத்தில் 60%, கேகாலை மாவட்டத்தில் 70%, கண்டி மாவட்டத்தில் 52%, மாத்தறை மாவட்டத்தில் 70%, திருகோணமலை மாவட்டத்தில் 85%, முல்லைத்தீவு மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதுதவிர மொனராகலை மாவட்டத்தில் 80%, பதுளை மாவட்டத்தில் 65%, புத்தளம் மாவட்டத்தில் 73%, மன்னார் மாவட்டத்தில் 70%, அம்பாறை மாவட்டத்தில் 70%, யாழ்ப்பாண மாவட்டத்தில் 47% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment
Post a Comment