(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாணத்தில் இவ்வருடம் பெரும் போக நெற் பயிர்ச்செய்கையில் 186663 ஹெக்டேயர் வயல் நிலங்கள் நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் தெரிவித்தார்.
கடந்த வருடஇறுதியில் ஏற்பட்ட வரற்சி மற்றும் பசளை பற்றாக்குறை போன்ற காரணிகளால் இம்பெரும் போக பயிர்ச்செய்கை பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மழை நீரை நம்பி செய்கை மேற்கொள்ளப்படும் மானாவரி நெற்பயிர்ச்செய்கையே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 28 வீதமாக நெல் உற்பத்தி குறைவடையலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போது ஏறத்தாழ 60 வீதமான நெல் வயல்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்ட சூழ் நிலையில் எதிர்வரும் மூன்று வாரத்திற்குள் அறுவடை பூர்த்தியடையலாம் எனவும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன் குறிப்பிட்டார்.
உற்பத்தி செய்யப்டும் நெல்லை சந்தைப்படுத்துவதற்கு நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் 78273 ஹெக்டேயர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 67855 ஹெக்டேயரும் திருகோணமலை மாவட்டத்தில் 39735 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்
Post a Comment
Post a Comment