நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
தானும், தனது கணவருமான கிளார்க் கேஃபோர்ட்டும் தங்களுடைய குழந்தை ஜூன் மாதம் பிறக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும், அச்சமயத்தில் தான் ஆறு வாரகால விடுப்பு எடுக்கவுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
'2017-ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது என்று எண்ணியிருந்தோம்' என்று தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
37 வயதாகும் ஜெசிந்தா ஆர்டர்ன், 1856-ஆம் ஆண்டுக்கு பிறகு, நியூசிலாந்தின் இளம் வயது பிரதமராக உள்ளார்.
கர்ப்பமாக இருப்பதாக ஆர்டர்ன் அறிவிப்பு வெளியிட்டபிறகு, அவரது சமூகவலைதள கணக்குகளில் ஏரளாமான வாழ்த்து செய்திகள் குவிந்துள்ளன.
Post a Comment
Post a Comment