எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடி: பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்




எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு அமைச்சினால் தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
072 8870 624 அல்லது 07777 48 417 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என பெட்ரோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடி இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மண்ணெண்ணெய் கலந்து எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெட்ரோலிய வளத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மண்ணெண்ணெய் கலந்து எரிபொருள் விநியோகித்த இராஜகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.