ஐக்கிய தேசிய கட்சியானது நாட்டில் இன மத பேதங்களை கடந்து சமூகத்தில் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து செயற்படுகின்ற கட்சியென அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்காக கொண்ட தேர்தலாக இது காணப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலுக்கான விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும் நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
எமது கட்சியானது கடந்த 1946ஆம் ஆண்டு உருவாக்கப்படும் போது நாட்டில் சிறுபான்மை உறுப்பினர்களை உள்ளடக்கி உருவாக்பட்ட கட்சியாகும். அந்த வகையில் தற்போதும் இவ் உள்ளூராட்சி தேர்தலிலும் சமூகத்திலும் அனைத்து மட்டத்திலும் உள்ள மக்களையும் ஒன்றிணைத்து உள்வாங்கியே வேட்பாளர்களை நியமித்துள்ளோம்.
கடந்த காலத்தில் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்றவற்றிற்கு வாக்களித்ததன் ஊடாக எதனை அவர்கள் செய்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆனால் நமது ஐக்கிய தேசிய கட்சியானது புதிய நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வந்து மூன்று ஆண்டுகளில் எதனை செய்தது என்பதை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
குறிப்பாக எமது கட்சியின் தலமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் நடைபெற்ற முதலாவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய் கீதம் பாடப்பட்டது. அது தற்போது வடக்கு கிழக்கு முழுவதும் தமிழில் இசைக்கப்படுகிறது என்று கூறினார்.
(யாழ் நிருபர் தீபன்)

Post a Comment
Post a Comment