உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான காணிகள், வீடுகளை விற்க நீதிமன்றம் தடை




ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான கம்பஹாவிலும் கொழும்பிலும் உள்ள காணிகள் மற்றும் வீடுகளை விற்பனை செய்ய கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த தடையுத்தரவை காணி பதிவாளர் நாயகத்திற்கு உடனடியாக அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை விமானப்படைக்கு யுக்ரேனில் இருந்து மிக் விமானங்களை கொள்வனவு செய்த போது இடம்பெற்ற முறையற்ற கொடுக்கல் வாங்கலினால் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தியே சொத்துக்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக பொலிஸ் நிதிக்குற்ற பிரிவு மன்றில் சுட்டிக்காட்டியிருந்தது.
இதனைப் பரிசீலித்த நீதவான் லங்கா ஜயரத்ன சொத்துக்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளார்.