மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகத்தின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலுவலகத்தின் முன்பக்கமாகவுள்ள பதாகை தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
வீதிகளில் எரிந்துகொண்டிருந்த மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு தமது அலுவலகத்தில் இருந்த பதாகை மீது தீ வைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் வேட்பாளர் தெரிவித்துள்ளார்.
தனது வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக சம்பந்தப்பட்ட வேட்பாளர் தெரிவித்தார்.
(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)

Post a Comment
Post a Comment