கதிர்காமம் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்ரபல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேநபரை திஸ்ஸமஹராம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கதிர்காமம் நகரத்தில் கட்டளையை மீறி பயணித்த மோட்டார் சைக்கில் மீது நேற்றிரவு 11 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சிலர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதன்போது கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கதிர்காமத்தை சேர்ந்த 44 வயதான ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
Post a Comment
Post a Comment