மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவுக்கு பிடியாணை




முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவை கைது செய்வதற்காக கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். 

அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானிய நாட்டை சேர்ந்த தம்பதியினரை கொழும்பில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. 

இந்த வழக்கில் சந்தேகநபரான அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாயிருக்கவில்லை என்று எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

அதன்படி அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்த மேலதிக நீதிபதி சதுரிகா விமலசேன வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 06ம் திகதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.