ராஜகிரிய- நாவல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்று நேற்று முன்தினம் இரவு (17) சீல் வைக்கப்பட்டதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிலையத்தின் விநியோக குழாயினைப் பயன்படுத்தி எரிபொருள் பௌசர் வாகனங்களுக்கு மண்ணென்ணெய் நிரப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் குறித்த நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையத்திலுள்ள எரிபொருள் விநியோக குழாயில் பௌசர் வாகனத்திற்கு எண்ணெய் விநியோகிப்பது சட்டவிரோத செயற்பாடெனவும், குறித்த செயற்பாடு நாவல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முன்னெடுக்கபட்டமையானது அவசர சுற்றிவளைப்பு பிரிவினரால் உறுதியாகியுள்ளது.
நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குறித்த எரிபொருள் நிலையத்தில் விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த எரிபொருள் நிலையம் திறக்கப்படாதென எரிபொருள் கூட்டுதாபன தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த எரிபொருள் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டமையால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மன்னிப்பைக் கோருவதாகவும் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment