பாடசாலை ஆசிரியர்களுக்கு தொலைத்தொடர்பாடல் மற்றும் ஊடக கற்கை பற்றிய விளக்கம் அளிக்கும் வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த திட்டத்தின் முதல் செயலமர்வு இன்று மாத்தறையில் இடம்பெறவுள்ளதுடன் தென் மாகாண பாடசாலைகளில் ஊடக பாடத்தை போதிக்கும் ஆசிரிய ஆசிரியைகள் இச் செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை பத்திரிகை பேரவை ஏற்பாடு செய்துள்ள குறித்த செயலமர்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் மூலம் விரிவுரைகள் நடத்தப்படவுள்ளன.
குறித்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் மங்கள சமரவீர பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment
Post a Comment