உண்ணாவிரதம் கைவிடப்பட்டது




ஹம்பாந்தோட்டை மாகம்புறை துறைமுக சேவையில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போரட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர். 

இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து தமக்கு சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றிருப்பதால் அவர்கள் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார். 

ஹம்பாந்தோட்டை, மாகம்புறை துறைமுக சேவையில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்கள் கடந்த 09ம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். 

ஹம்பாந்தோட்டை, மாகம்புறை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு முன்னதாக நவம்பர் 30ம் திகதி முதல் இந்த ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அவர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

எவ்வாறாயினும் தற்போது சாதகமாக பதில் கிடைத்துள்ளதாகல் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.