மனைவியைும் பிள்ளையைும் வெட்டிவிட்டு தானும் கழுத்து வெட்டி தற்கொலை




யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பிரதேசத்தில் சிவன் கோவிலுக்கு அருகில் கணவன் தனது மனைவியையும் பிள்ளையையும் வெட்டிவிட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சம்பவத்தில் தந்தையும் மகளும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்​. 

சம்பவத்தில் உயிரிழந்திருப்பது 03 வயது சிறுமி என்று தெரிய வந்துள்ளது. 

வெட்டுக் காயத்தில் படுகாயமடைந்துள்ள மனைவி தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் கூறினார். 

இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

(யாழ் நிருபர் சுமித்தி)