மட்டக்களப்பு வின்சென்ற் பெண்கள் தேசிய உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர்




(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு வின்சென்ற் பெண்கள் தேசிய உயர்தரப் பாடசாலைக்கு கல்வி அமைச்சினால் புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலயப் பணிப்பாளர் கே. பாஸ்கரன் தெரிவித்தார்.
அப்பாடசாலையின் பழைய மாணவியான இலங்கை கல்வி நிருவாகச் சேவை தரம் 3 ஐச் சேர்ந்த கரண்யா சுபாகரன் (Caranniya Subaharan – SLEAS III) செவ்வாய்க்கிழமை 16.01.2018 தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல பெண்கள் உயர் தரப் பாடசாலையாக விளங்கும் வின்சென்ற் கல்லூரியில் தற்போது சுமார் 2300 இற்கு மேற்பட்ட தமிழ் முஸ்லிம் மாணவிகள் கற்கின்றனர்.