கிண்ணியாவில் சான்றிதழ்கள் பெறுவதில், சிக்கல்




கிண்ணியா பிரதேச செயலகத்தில் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களைப் பெறுவதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக, பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மக்களுக்கு வழங்கும் சேவைகளை, அரசாங்கம் பல்வேறு வகையில் துரிதப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்களை அரை மணி நேரத்தில் வழங்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், கிண்ணியா பிரதேச செயலகத்தில் காலையில் விண்ணப்பம் கொடுத்தால் மாலையில் வழங்கப் படும் நிலையே இன்னும் நடைமுறையில் உள்ளது.