கிழக்கு ஆளுனர் அலுவலகத்தால் புதிய எஸ்.எம்.எஸ்.சேவை




அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தினால்  பொது மக்களுக்கு ஆற்றப்படுகின்ற சேவைகள் மற்றும் பொது மக்களின்  முறைப்பாடுகளை உடனடியாக தெரியப்படுத்தும் நோக்கில் புதிய குறுந்தகவல் சேவையொன்று இன்று (18)  கிழக்கு  மாகாண ஆளுனரின் செயலாளர் திரு.
ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுனர் பொதுமக்களை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் கேட்போர் கூடத்தில்  சந்திப்பதுடன் அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்கப்பட்டு வருவதுடன்  அது தொடர்பிலான தீர்வினை குறுஞ்செய்திகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் கிழக்கு மாகா ணஅரச திணைங்களங்களில் இடம் பெறும் சேவைகள் மற்றும் சிறந்த சேவைகள் வழங்கப்பட்டாமை குறித்தும் பொதுமக்கள் தெரிவிக்க முடியும் எனவும் முறைப்பாடுகள் இருந்தால் 0262222102  என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிப்பதுடன்  அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் காணப்படுகின்ற முறைப்பாடு பெட்டிக்குள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் ஆளுனருன் செயலளார் அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உதவி செயலாளர் யூ.சிவராஜா நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்