யாழ்.பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
பகிடிவதை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே குறித்த மோதலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
பல்கலைக்கழக வாயிலில் மோதிக்கொண்ட மாணவர்கள் அங்கிருந்து நகர்ந்து பரமேஸ்வரா சந்திவரை சென்று அங்கும் மோதிக்கொண்டுள்ளனர்.
கற்களை வீசியும் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியால் போக்குவரத்தில் ஈடுபட்டோர் சிரமத்துடனும் பயத்துடனும் பயணித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு இரு பொலிஸாரே வந்துள்ளனர். அவர்களால் மாணவர்களை அப்பகுதியில் இருந்து அகற்ற முடியாத நிலை காணப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
Post a Comment
Post a Comment