முஸ்லிம் விவாகச் சட்டத்தில் திருத்தங்களை செய்ய பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை நீதியமைச்சர் தலதா அத்துகோரலவிடம் கையளித்துள்ளது.
அந்தக் குழுவின் தலைவரான உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுக் சம்பந்தப்பட்ட அறிக்கையை அமைச்சரிடம் கையளித்ததாக, நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக, பரிந்துரைகளை முன்வைக்கும் பொருட்டு கடந்த 2009ம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சரால் 17 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்தநிலையில், குழு தமது பரந்துரைகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, அண்மையில் தறபோதைய நீதியமைச்சர் தலதா அத்துகோரல ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதன்படி, இன்று குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, நீதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

Post a Comment
Post a Comment