(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)
கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா, பிரதான வீதி சந்தியில் நேற்று (18) மாலை முச்சக்கரவண்டி ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜ.பி.ஹேரத் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் கல்குடாவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு.சூரியகுமார் (வயது 37) என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும், அதே இடத்தைச் சேர்ந்த ஜே.ஜெயதீபன் (வயது 40) என்பவர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பாசிக்குடா கடற்கரையில் இருந்து முச்சக்கரவண்டியில் நண்பருடன் தமது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை வண்டியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜ.பி.ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment