‘சரவணபவன், ஒரு சருகு புலி’ – சுரேஸ்




- எஸ்.நிதர்ஷன்-
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஒரு வியாபாரி. அதனை தவிர்த்துப் பார்த்தால் அவர் ஒன்றுமே இல்லாதவர். ஆகையால் அவரது மிரட்டல்களுக்கு அஞ்சத் தேவையில்லை. அவ்வாறு அஞ்சுகின்ற நிலைமையில் நாங்களும் இல்லை” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக 2 கோடி ரூபாய் நிதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்திலேயே சிவசக்தி ஆனந்தன் தெரிவித்திருக்கின்றார்.
அவ்வாறு பேசுகின்ற போது, ஏனைய உறுப்பினர்கள் எங்கே போனார்கள். அங்கு ஏன் அதனை மறுதலிக்கவில்லை. அங்கு பேசாமல் இருந்து விட்டு இங்கு வந்து வெவ்வேறு கருத்துக்களை ஏன் வெளியிடுகின்றனர்.
ஆகவே, சரவணபவன் போன்றவர்களின் மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்சப் போவதில்லை. அவர் ஒரு சருகு புலி. மேலும் ஒரு வியாபாரி. அதனை தவிர்த்து பார்த்தால் அவர் ஒன்றுமே இல்லாத ஒருவர்” என தெரிவித்தார்.