வவுனியா மாவட்டத்தில் சில இடங்கள் 'டெங்கு சிவப்பு வலய' பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 70 பேரளவில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வவுனியாவின் கற்குழி மற்றும் நெளுக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த 16 நாட்களில் மாத்திரம் 70 பேர் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதனால் வவுனியாவின் கற்குழி, நெளுக்குளம் மற்றும் செட்டிக்குளத்தின் சில பகுதிகள் 'டெங்கு சிவப்பு வலயமாக' அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் கூடுதலானோர் கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களிற்கு சென்று வருபவர்களாகவே இருக்கின்றனர்.
சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும். டெங்கு நோய்க்குரிய அறிகுறி தெரியும் பட்சத்தில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்." என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment
Post a Comment