(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதியில் துவிச்சக்கர வண்டியுடன் மீன் லொறி மோதி விபத்துக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று (21) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் நிலாவெளி-கோபாலபுரம் பகுதியைச்சேர்ந்த ஜே.ராஜேந்திரன் (65வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வேகமாக வந்த மீன் லொறி மோதியதாகவும் இதனாலேயே இவ்விபத்து இடம் பெற்றதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment
Post a Comment