எமது நாட்டில் அரசியல் செய்ய வருகின்றவர்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை திருடுகின்றனர் எனவும், இதுவே எமது நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாகும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவடிவேம்பில் நேற்று(21) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் அரசியல் செய்ய வருகின்றவர்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை களவாடுகின்றார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாக நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மக்கள் பணத்தை களவாடவோ சூரையாடவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.
ஊழல் மோசடிகளைக் கண்டறிய ஆணைக்குழுக்களை அமைத்தோம். இந்த ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம் குற்றவாளிகள் என கூறப்பட்டிருக்கும் அனைவருக்கும் எதிராகவும் நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம். எந்த கட்சியைச் சார்தவர்களானாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கமாட்டோம்.
இந்த நாட்டிலே சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்க மக்களுக்கு அழைப்புவிடுக்கிறேன்.
மக்கள் பணத்தை கொள்ளையிட்டு அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணத்தை திருடிய அரசியல் கலாசாரத்தினால் இன்று வேறு எந்தவொரு கட்சித் தலைவருக்கும் அரசியல் மேடைக்கு வந்து தாம் தூய்மையானவர்கள் என்றோ மக்கள் சார்பானவர்களென்றோ கூறமுடியாதுள்ளது. ஊழல் மோசடிகள், கள்வர்கள் இல்லாத சிறிய மனிதர்களின் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி மக்கள் சார்பு பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment