இலங்கைக்கு வெற்றி இலக்கு 321




இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. 

பங்களாதேஷ் அணி சார்பாக தமீம் இக்பால் (Tamim Iqbal) 84 ஓட்டங்களையும், சகீப் அல் ஹசன் (Shakib Al Hasan) 67 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் (Mushfiqur Rahim) 62 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக திசர பெரேரா 3 விக்கெட்டுக்களையும் நுவன் பிரதீப் 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர். 

இந்த போட்டியில் வெற்றி பெற இலங்கைக்கு அணிக்கு 321 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை, சிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.