மட்டக்களப்பு மாவட்டத்தில் 2017ஆம் ஆண்டில் பால்நிலை வன்முறைகள் அதிகரிப்பு




மட்டக்களப்பு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டினை விடவும் 2017ஆம் ஆண்டின் அறிக்கைகளின் படி பால்நிலை தொடர்பான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள தாய் சேய் நலன் பிரிவு வைத்திய நிபுணர் கே.அச்சுதன் தெரிவித்தார்.
இவற்றினை குறைப்பதற்கான செயற்பாடுகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைக் குறைக்கும் மாவட்ட மட்ட வலையமைப்பினுடைய கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் அ.நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருணாளினி சந்திரசேகரம், உதவிப்பிரதேச செயலாளர்கள், சிறுவர் பெண்கள் தொடர்பில் செயற்படும் உத்தியோகத்தர்க்ள. அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுமு; கலந்து கொண்டனர்.