கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலைக்கு செயற்கை சுவாச இயந்திரம் (வென்டிலேடர்) வழங்கிவைப்பு
******************************************************************************
******************************************************************************
மெஸ்ரோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்-ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக டுபாய் அட்லாண்டிக் லுப்ரிகன்ட் நிறுவனத்தின் தலைவர் சேக் நாசிம் அஹமட்டின் நிதி உதவியில் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கான செயற்கை சுவாச இயந்திரம் (வென்டிலேடர்) வழங்கிவைக்கும் நிகழ்வு வைத்தியசலை அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். றகுமான் தலைமையில் இன்று (16) சனிக்கிழமை காலை வைத்தியசாலை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
மெஸ்ரோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தவிசாளரும் டுபாய் அட்லாண்டிக் லுப்ரிகன்ட் நிறுவனத்தின் தலைவருமான சேக் நாசிம் அஹமட் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு 25 இலட்சத்தி 75 ஆயிரம் ரூபா பெறுமதியான குறித்த செயற்கை சுவாச இயந்திரத்தை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மெஸ்ரோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நசீல், அந்நிறுவனத்தின் இணைப்பாளர் எம். ஜின்னா, சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபள்யூ.எம். சமீம், ரேடியோலஜிஸ்ட் டாக்டர் ஜனுல் ஹிதாயா, டாக்டர் ஏ.எல். பாறூக், உள்ளிட்ட அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலையின் வைத்திய நிபுனர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பு வரையிலான மக்கள் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் சில சந்தர்ப்பங்களில் தெஹியத்த கண்டி மற்றும் மகியங்கன பிரதேசத்திலிருந்தும் சிகிச்சை பெறுவதற்காக இங்கு மக்கள் வருகின்றனர். இப்பிரதேசத்தில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கொண்ட ஒரே ஒரு வைத்தியசாலையாக இவ்வைத்தியசாலை காணப்படுவதனால் அதிகளவிலான இப்பிரதேச மக்கள் சிகிச்சை பெறுவதற்காக இங்கு வருகின்றனர்.
இருந்தபோதிலும் இவ்வாறான செயற்கை சுவாச இயந்திரம் பற்றாக்குறையாக காணப்பட்டதனால் அதிகளவிலான நோயளிகளுக்கு ஒரே தடவையில் சிகிச்சையளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. தற்போது இவ்வியந்திரம் கிடைக்கப் பெற்றமையினால் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment