எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, பாலமுனை ஹோமியபதி அரச வைத்தியசாலை இன்று (09) இனந்தெரியாத குழுவொன்றினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல் அங்கிருந்த மருந்து வகைகள் மற்றும் மருந்து சிட்டைகள், பதிவேடுகள் என்பவற்றை சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களிலிருந்து நாளாந்தம் நூற்றுக்கணக்கான நோயாளர்கள் சிகிச்சை பெறும் இவ் வைத்தியசாலை சிறந்த முறையில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment