கல்லடியில் திருடப்பட்டவை,திரியாயவில் மீட்பு




மட்டக்களப்பு கல்லடியில் திட்ருட்டு போன நகை மற்றும் பணம் என்பன திருகோணமலை திரியாய் பகுதியில் வைத்து காத்தான்குடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக குறித்த சந்தேக நபர்கள் நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டதுடன் நகை மற்றும் பணமும் திருகோணமலை, திரியாய் பகுதியில் வைத்து கைப்பற்றபட்டுள்ளன.