அறிவுக் களஞ்சியப் போட்டியில், கிண்ணியா மு.பா.ம.வி அணி வெற்றி பெற்று சம்பியனாகியது.





(ஆசீக்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரகோன் கலையகத்தில் நேற்று (05.10.2017) அகில இலங்கை ரீதியிலான அறிவுக் களஞ்சியப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இறுதிப்போட்டியை உலக அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீத் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இதில் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் எஸ்.முஹம்மது ஹனிபா அவர்களும் தயாரிப்பாளர் ஏ.எம்.முஹம்மது ரலீன் அவர்களும் இணைந்து கொண்டனர். 
இறுதிப் போட்டியில் கொட்டாரமுல்ல அல் ஹிரா மு.ம.வி, கிண்ணியா முஸ்லிம் பாலிகா ம.வி என்பன கலந்து கொண்டன.

இதில் கிண்ணியா மு.பா.ம.வி அணி வெற்றி பெற்று சம்பியனாகியது.