கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி கல்கிஸ்ஸையில், மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் மீதான அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (06) காலை கொழும்பு குற்றவியல் பிரிவில் சரணடைந்த குறித்த நபர், மஹவாத்துவ பிரதேசத்தை சேர்ந்த, 40 வயதான ப்ரகீத் சானக குணதிலக என்பவராவார்.
இச்சந்தேகநபர், பொலிசில் பணி புரிந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் என்பதோடு, அவர் பணி நீக்கம் செசய்யப்பட்டவர் என பொலிசார் தெரிவித்தனர்.
இவருக்கு எதிராக பாணந்துறை நீதவான் நீதிமன்றில் 03 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் பள்ளி ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தி நஷ்டம் ஏற்படுத்திய இரு வழக்குகளும், பாணந்துறை பெண்கள் பாடசாலையின் பெண் அதிபருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலான ஒரு வழக்கும் இவ்வாறு நிலுவையில் உள்ளன.
குறித்த சந்தேகநபரை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment