உலகை வெற்றிகொள்ள முயன்றுகொண்டிருப்பவர்களில் 14 வயதான சவுந்தரநாயகன் பவிந்தரவர்சனும் ஒருவர்.
மாத்தளை – மந்தண்டாவளை இந்து தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் இவர், மாத்தளை நோர்த் 2 ஆம் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்தவர்.
குடோ விளையாட்டில் அதிசிறந்த ஆற்றல் கொண்டவராகத் திகழும் பவிந்தரவர்சன், மாகாண மற்றும் தேசிய மட்ட குடோ போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இந்தியாவின் மும்பையில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச குடோ போட்டியில் பங்கேற்கவும் பவிந்தரவர்சன் தகுதி பெற்றுள்ளார்.
ஆனாலும், அந்தப் போட்டிக்கு அவரால் செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வீட்டின் வறுமை காரணமாக, இவரை மும்பைக்கு அனுப்புவதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளார் பவிந்தரவர்சனின் தந்தை.
Post a Comment
Post a Comment