இயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்?




இயற்கை அனர்த்தம் என்றால் என்ன? என்பதை நோக்கும் போது பௌதீகச்சூழல் மூலம் இற்கையாக மனிதனுக்கு கேடுவிளைவிக்கும் வகையில் ஏற்படுத்தப்படும் நிகழ்வுகளை இயற்கை அனர்த்தங்கள் என்பர். அதாவது மனிதனின் மாற்றங்களினால் இயற்கைச் சூழலில் ஏற்படும் நிகழ்வுகள் இயற்கை அனர்த்தங்கள் எனப்படும்.
புவியியல் அமைப்பு, கால நிலைக் கோலங்கள், ஆகியவற்றிக் கேற்ப இயற்கை
அனர்த்தங்கள் நிகழுகின்றது. எனினும் அவை எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை அல்ல. இவற்றுள் வரட்சி, வெள்ளம், சூறாவளி, நிலடுக்கம் போன்றவை பாரிய பிதேசத்தை ஒரேயடியாகப் பாதிக்கும். எனினும் நிலச்சரிவு, எரிமலை, வெடித்தல், பனிமலை உடைந்து விழுதல், காட்டுத்தீ போன்ற அனர்த்தங்கள் குறிப்பிட்ட இடத்திற்குமட்டும் பாதிப்பை ஏற்படுத்தும். இற்கை அனர்த்தம் நடைபெறும் முறைக்கேற்ப அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1) புவியியல் ரீதியான அனர்த்தங்கள்:
புவி நடுக்கம்,* சுனாமி * எரிமலை வெடித்தல் * நிலச்சரிவு
2) காலநிலைமாற்றங்கள்:-
*சுழிக்காற்று *வெள்ளம் *மின்னல்தாக்கம் *வறட்சி *பனிமலைஉடைந்துவிழுதல்
3)உயிரியல்உபத்திரங்கள்: தொற்றுநோய்கள்.என்பனவாகும்.
இயற்கை அனர்த்தங்களால் உலகின் பல நாடுகளில் எதிர்பாராத பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இயற்கை அனர்த்கங்களினால் உயிர்களுக்கும் சொத்தக்களுக்கும் ஏற்படும் சேதங்கள்.மிகப் பாரதூரமானது எதிர்பாராமல் ஏற்படும் . அழிவுகளினாலும் மனித செயற்பாடுகளினாலும் இயற்கை அனர்தங்கள் அதிகரிக்கின்றன.
மின்னல் தாக்கம். வெள்ளப் பெருக்கு நிலச்சரிவு வரட்சி சூறாவளி சுனாமி நில நடுக்கம் பூகம்பம் போன்ற பல இயற்கை அனர்தங்களினால் உலக நாடுகள் பாதிக்கப்படு வததுடன் எமது நாடும் பாதிப்புக்குள்ளாகி வருவதை அறியக்கூடியதாகவுள்ளது.

இயற்கை அனர்த்தங்களை இனங்கண்டு .அதிலிருந்து பாதுகாப்புபெறுவது
என்பது மட்டுல்லாது அது தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டுவது ஊடகவியலாளரின் சமூகம் சார்ந்த பொறுப்பாகும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இக்கட்டுரை எழுதப்படுகிறது. அந்த வகையில் சில இயற்கை அனர்த்தங்களை நோக்குவோம்.
A மின்னல் தாக்கம்.
.
மின்னலில் 25000 - 30000 அம்பியர் மின் உண்டு மின்னலில் ஒரு சென்ரிமீற்றர் இடைவெளியில் கெண்டுள்ள அழுத்தவித்தியாசம் 10.000V ஆகும் மின்னலானது 30000 C ’வெப்பநிலையைக் கொண்டது ஒளியின் வேகத்திலே மின்னல் பயனிக்கிறது.(3×108Ms-1) அதாவது ஒரு செக்கனில் மூன்று மில்லியன் மீற்றர் தூரத்தில் மின்னல் செல்கின்றது.
வானில் உருவாகும் மின்னல் நிலத்தை நோக்கிப்பாய்வதனாலேயே மின்னல் தாக்கம் ஏற்படுகிறது .மின்னல் பாய்வதனால் ஏற்படுகின்ற பாதிப்பு எதிர்வு கூறமுடியாதுள்ளது.
மின்னல் தாக்க மானது மூன்று முறைகளில் அழிவை ஏற்படுத்தும்.
1.மின்னலின் நேரடித்தாக்கம்.
மின்னல்தாக்கத்தினால் நேரடியாக ஏற்படும் பாதிப்பு இதுவாகும். இதனால் குளிரூட்டி
கூரை புகை போக்கி, கட்டங்களுக்கு வெளியிலுள்ள, வீட்டுக்கூரையிலுள்ள பொருட்கள் ,
உயரமான உலோகப் பொருட்கள் , ​மரப்பலகையால் செய்யப்பபட்ட பொருட்கள் என்பன மின்னலின் நேரடித் தாக்கத்திற்குள்ளாகும்.​
02.மின்னலின் மறைமுகத்தாக்கம்:
மின்னலால் உருவாகும் மின்னோட்டத்தில் இலத்திரனியல் பொருட்கள் பாதிப்படைகின்றன. .உதாரணமாக தொலைபேசி ,தொலைக்காட்சி, புகைப்படக்கருவி போன்ற பொருட்கள் மின்னலின் மறைமுகத்தாக்கத்திற் குள்ளாகின்றன.
03) மின்னலில் உருவாகும் மின் காந்தப்புலத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள்:
இந்தக் காந்தப்புலத்தினால் கட்டிடத்தினுள் காணப்படும் கம்பிகளில் (கடத்திகளில்) மின்னோட்டம், மின்னழுத்தம், தோன்றுகிறது​.​ இது கணனி போன்ற இலத்திரனியல் பாகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றது
உதாரணம்.
கொன்கிரீற் சுவர்களின் தூண்களிலுள்ள கம்பிகளினூடாக மின்பாயும் போது உருவாகும் காந்தப்புலம் காந்த நாடாக்கள் காந்தப் புலத்தட்டுகளில் (கணனியில்) உள்ள தகவல்களை அழித்துவிடுகின்றது.
மேலும் உயர்ந்த மரங்கள் கட்டடங்கள் அண்டனா” மின்கம்பிகள் போன்வற்றிக்கு மின்னலினால் ஏற்படும் தாக்கம் அதிகமாகும் மின்னல் எப்போதும் குறைந்த தடைகளனுடகவெ​ பயனிக்கிறது. மனித. உடலினூடாக மின்பாயும் போது உடலின் உட்புறத்தில் தடை அதிகமாவதன் காரணமாக ஒருவரின் தலையிலிருந்து பாதம் வரை தோலினூடாக மின்பாய்கிறது.இதனை “பிளஸ்ஓவர்” (மேற்பரப்புக் கடத்தல்) என்று அழைக்கப்படுகிறது.
இங்கு பெரிய மின்னோட்டம் உடலின் மேற்பரப்பினூடாக பயணிப்பதால் உடலின் உட்புறத்தினூடாக பயணிக்கும் மின்னலின் அளவானது குறைவடைகிது. .இதனால் உடலின் உட்புற உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாகக் காணப்படுகின்றது கட்டடத்திற்கோ அல்லது வீட்டிற்கோ மின்னல் தாக்கும் போது பாரிய மின்னோட்டம் தொலை பேசிக்கம்பிகளினூடாகச் செல்கிறது .இச்சமயத்தில் யாராவது ஒருவர் தொலைபேசியை பாவித்தால் தொலைபேசியை பாவிக்கும் நபரின் தலையினூடாக மின்பாய்ந்து நரம்புத்தொகுதி வெகுவாகப்பாதிக்கும்.
மின்னல் தாக்கம் இருக்கும் போது உயரமான மரங்களில் இருப்பது ஆபத்தானதாகும். மரம்20% ஈரலிப்பையும் மனிதனின் உடல்65% ஈரலிப்பையும் கொண்டுள்ளது.
மரத்தில் மின்னல் தாக்கும் போது மரத்தினூடாக வரும் மின் குறைந்த தடையினூடாகச் செல்லும் ஆக​வமரத்துடன் ஒருவர் தொடர்பாக விருப்பதால் அவரின் உடம்பில் மின்பாயும் .மின்னல் தாக்கத்தின் போது முழுமையாக உலோகங்களால் செய்யப்பட்ட மூடிய வாகனதினுள் இருப்பதால் மின்னலில் இருந்து பாதுகாப்புப் பெறலாம்.
மின் தாக்கதிலிருந்து பாது காப்புபெறும் வழிகள்.
*,கட்டடம் வீடுகளில் மின் சுற்றுக்குரிய புவிக்கம்பிகள் உரியமுறையில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
.
*வீட்டிற்கு அருகாமையிலுள்ள மரங்களுக்குமிடையில் மின்சாரம் பாயக்கூடிய வயர்கள் பெருத்தப்பட்டிருந்தால், இணைக்கப்பட்டிருந்தால் அத்தொடர்புகளைத்துண்டிக்க வேண்டும்
*மின்சார உபகரணங்களை பிரதான மின் சுற்றிலிருந்து துண்டித்து வைத்தல் வேண்டும்.
*தொலைக்காட்சிப் பெட்டியின்“ அண்டனாவை ​துண்டிப்பதுடன் அண்டணா கட்டப்பட்ட கம்பியை நேரடியாக புவியுடன் தொடுகையுற வைக்க வேண்டும்.
*)மின்னல் ஏற்படும் போது மின்சார உபகரணங்கள்
குளிர்சாதனப்பெட்டி, மின்னழுத்தி ,தொலைக்காட்சி, வானொலி, இரும்பிக்கம்பிகள் என்பவற்றை இயலுமானஅளவு தொடுவதையும்,, கையாள்வதையும் தவிர்த்தல் வேண்டும்.
*மின்னலடிக்கும்போது திறந்தவெளியில் நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு ச்செல்ல வேண்டும்..மின்னல் ஏற்பட்டு 15 செக்கனில் பின்னரே இடிமின்னல் ஒலிகேட்கும் எனவே விரைவாக. பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும்.
*திறந்த வெளிகளில் வயல், தேயிலைத்தோட்டம், விளையாட்டுமைதானம், கடற்கரை போன்ற இடங்களில் சுற்றித்திரிவதைத் தவிர்த்தல். திறந்த வெளியில் இருக்கும் போது குனிந்து இருத்தல் வேண்டும்.
*குனிந்திருப்பதன் மூலம்அல்லது படுப்பதன் மூலம் உடம்பின் உயரத்தைக் குறைக்க வேண்டும்.
*இரண்டு கால்களையும் சேர்த்து குந்தியிருத்தல வேண்டும்.
இரும்பிலான தூண்கள் கட்டடங்கள் போன்றவற்றை தொடுதல் அருகில் இருப்பது தவிர்க்கப்படல் வேண்டும்
.
11)மின்னலின் போது கைத்தொ​லை​பேசிப் பாவனயை தவிர்த்தல் வேண்டும்.
B) சூறாவளி:---Cyclone
இலங்கையில் ஒக்டோபர் மாதம் தொடக்கம் டிசம்பர் வரையிலான இடைப்பருவக் காற்றுக்கள் வீசும் காலப் பகுதிகளில் சூறாவளியின் தாக்கம் காணப்படுகிறது. வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கம் இதற்கு காரணமாக அமைகின்றது. டிசம்பர மாதத்திலே அதிகமான சூறாவளித்தாக்கம் ஏற்படுவதாக அறியமுடிகிறது சூறாவளி யானது இடத்துக்கிடம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது ‘.ஹரிக்கேன்’ ‘சைகிளோன்’ ‘தைபூன்’ என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றது.
சூறாவளியின் தோற்றம் , வேகம், இயல்பு, பயணப் பாதை, என்பவற்றினைப் பொறுத்து அதன் பாதிப்புக்கள் காணப்படும். இந்தப் பாதிப்புக்கள் சாதரண விளைவு களிலிருந்து பாரதூரமான விளைவுகள் வரை காணப்படும். குடியயிருப்புக்கள் நிறைந்த பகுதிகளினூடாக சூறாவளி செல்லும் போது பலத்த உடமைச் சேதத்தையும், உயிர் இழப்புக்களையும் சூறாவளியானது ஏற்படுத்துகிற.சூறாவளியின் காரணமாக கடும் மழை, கடும் வேகம் கொண்டகாற்று, ,வெள்ளப் பெருக்கு,கரையோரப் பகுதிகளில் கடல்அலை உட்புகுதல் போண்றன ஏற்படும். கடும் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்படக்கூடும்.
மேலும்​ மாசடைந்த நீரின் காரணமாக தொற்று நோய்கள் ஏற்பக்கூடும் சூறாவளியின்​​ மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள்.------
# சகலவிதமான மின்சாரத் தொடர்பையும் துண்டித்தல்
கதவு யன்னல்களை விட்டுதுரமாக இருத்தல் .
மீன் பிடிப்படகுகளை நன்கு நாங்கூரமிட்டு நிறுத்தி வைத்தல்.
உறுதியான பாதுகாப்பு பகுதியில் வாகனங்ளை நிறுத்தி வைத்தல்.
C) வெள்ளப்பெருக்கு:
ஏற்படுவதற்கான காரணங்கள் இரண்டு
இயற்கைக் காரணிகள் 2)
மனிதசெயற்பாடுகள்
இயற்கைக் காரணிகளைப் பொறுத்தமட்டில்: மழைவீழ்ச்சி, பாறைகளின்அமைப்பு, வனத்தின் செறிவு (காடு) ஆகியனவாகும்.
மனித செயற்பாடுகளைப் பொறுத்தமட்டில் நீர்செல்லும் பாதைகளில் தடைகளைஏற்படுத்தல்
(1)நீர்செல்லும் வடிகான்களை முறையாகப் பேணமை.
(2)நீரைத் தேக்கிவைக்கக்கூடிய சதுப்புநிலங்கள் நிரப்பப்படல்.
.
(3)நீர்வழிந்தோடும் இடங்களில் கழிவுகளை போடுதல்.
(4)தாழ்நிலங்கள் நிரப்பப்படல்.மக்களிடம் சட்திட்டங்கள் பற்றிய தெளிவின்மை.
போன்ற. காரணிகளால் வெள்ளப்பெருக்குகள் ஏற்படுகின்றன.
எனவே இவற்றை சீர்செய்வதன்மூலம் வெள்ளப்பெருக்கிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
D) சுனாமிTsunami
சமுத்திரம் மற்றும் கடலின் அடியில் ஏற்படுகின்ற நிலநடுக்கம் அல்லது மண்சரிவு அல்லது எரிமலை வெடிப்பு,விண் கற்கள் விழுதல் ஆகிய காரணங்களால் கடல் அலைகளில் ஏற்படுகின்ற குழப்பமான நிலையை சுனாமி என்று அழைக்கப்படுகின்றது.
சுனாமி ஏற்படக்காரணம்.
கடலுக்கடியில் அல்லது கடலுக்கருகே ஏற்படும் நிலநடுக்கம், நிலச்சரிவு அனுக்கருவெடிப்பு போன்றன சுனாமி ஏற்படுவதற்கு பிரதான காரணிகளாகும்.நில நடுக்கம் எனும்போது புவி யோட்டிக்கு உட்புறமாகவுள்ள பாறை,படைகள்.இரண்டிக்கு மத்தியில் ஏற்படும் அதிர்வு.புவி நடுக்கம் எனப்படும்.
சுனாமியினால் உடமைச்சேதம் உயிர்ச்சேதம் பொருளாதாரரீதியான பாதிப்பு உளரீதியான பாதிப்பு என்பன ஏற்படுகின்றது.
சுனாமி அனர்த்தத்தை
இனங்கானும் முறை:
01) கடல் நீர் மட்டம் கூடிக்குறைதல்
02) தரைஅதிர்தல்
03)கடலில் பெரும் அலைகள் தோன்றுல்
04 விலங்குகளின் செயற்கையான நடத்தைகள் உருவாகுதல்.
05 மண்அங்கிகள் வெளிவரல்,(கரையைநோக்கி)
06 கடல்வந்து போகுதல் கடலின் அடியைக்காண முடிதல் கடல் பக்கமிருந்து இரைச்சல் கேட்டல்.மேலும் இவ் வாரான அனர்தங்களிலிருந்து ஒவ்வொருவரும் தம்மைபாதுகாத்துக் கொள்வது நல்லது அத்துடன் தொடர்ச்சியாக ஊகங்களுக்கு செவிமடுத்து பெறுகின்ற தகவல்களுக்கேற்ப இந்த அனர்த்தத்திலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
நன்றி.
எழுத்து ஆக்கம் ஆசிரியர்
இறக்காமம் இஸ்மாயில் ஹுஸைன்தீன்
(B Ed)