லாஸ் வேகஸில், ரூட் 91 என்ற மூன்று நாள் நாட்டுப்புற இசைத் திருவிழாவின் கடைசி நிகழ்ச்சிமுழு வீச்சில் நடந்துகொண்டிருந்த போது, 64 வயதான ஸ்டீஃபன் பேடக் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்.
தாக்குதல் நடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது செப்டம்பர் 28-ம் தேதி மாண்டலே பே ஹோட்டலில் உள்ள அறையினை ஸ்டீஃபன் பேடக் பதிவு செய்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
அவர் தங்கியிருந்த அறையில், சூட்கேஸ்கள் இருந்ததாக லாஸ் வேகஸ் ஷெரீப் கூறுகிறார்.
ஸ்டீஃபன் பேடக்,மாண்டலே பே ஹோட்டலின் உள்ள 32வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தார். அறையில் இருந்த இரண்டு ஜன்னல்கள் வழியாக மாறி மாறி மக்களை நோக்கி சுட்டார் என கருதப்படுகிறது.
தானியங்கி துப்பாக்கிகள் சுட ஆரம்பித்தபோது ஆயிரக்கணக்கான மக்கள், பாடகர் ஜசன் அல்டீன் பாடிய பாடலை ரசித்துக்கொண்டிருந்தனர்.
முக்கிய புள்ளியில் இருந்து மக்கள் கூட்டத்தை நோக்கி ஸ்டீஃபன் பேடக் துப்பாக்கி தோட்டா மழையினை பொழிந்த போது, தங்களைத் தற்காத்துக் கொள்ள மக்கள் ஓடினர். பலர் தங்களைத் தரையில் தாழ்த்திக்கொண்டனர்.
"ஒரு நபரில் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது. ஏதோ மோசமாக நடக்கிறது என அப்போதுதான் நான் உணர்ந்தேன்" என்கிறார் லண்டனைச் சேர்ந்த மைக் தாம்சன்.
"மக்கள் அங்கும் இங்கும் ஓடினார்கள். அங்கு ஒரே குழப்பமாக இருந்தது" எனவும் அவர் கூறுகிறார்.
ஸ்டீஃபன் பேடக் ஹோட்டல் அறையில் இருந்து, 23 துப்பாக்கிகளை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். மேலும் 19 துப்பாக்கிகளும், வெடிபொருட்களும் பேடக் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது காரில் இருந்து அம்மோனியம் நைட்ரேட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆனால், ஸ்டீஃபன் பேடக் இத்தாக்குதலை நடத்தியதற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
Post a Comment
Post a Comment